டெஸ்ட் கிரிக்கெட்டில் மெக்கலமின் சாதனையை சமன்செய்த பென் ஸ்டோக்ஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லத்தின் சாதனையை பென் ஸ்டோக்ஸ் சமன் செய்தார்.
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 281 ரன்களும், பாகிஸ்தான் 202 ரன்களும் எடுத்தன. 3ஆவது நாளான நேற்று இங்கிலாந்து அணி 64.5 ஓவர்களில் 275 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதில் இங்கிலாந்து கேப்டனும், ஆல்-ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்தார். இந்த சிக்சருடன் சேர்த்து டெஸ்டில் அவரது ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 107 ஆக (88 போட்டி) உயர்ந்தது.
Trending
இதன் மூலம் சர்வதேச டெஸ்டில் அதிக சிக்சர் அடித்தவரான நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லத்தின் சாதனையை (101 டெஸ்டில் 107 சிக்சர்) பென் ஸ்டோக்ஸ் சமன் செய்தார்.
Ben Stokes - Brendon McCullum #Cricket #England #PAKvENG #BenStokes pic.twitter.com/WOWBsMzeYK
— CRICKETNMORE (@cricketnmore) December 11, 2022
அனேகமாக அடுத்த டெஸ்டில் இச்சாதனையை முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் 3ஆவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் (100 சிக்சர்) உள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now