
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பல்வேறு பரபரப்புகள் மற்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. முன்னதாக மிச்சல் ஸ்டார்க் பிடித்த கேட்ச் அவுட்டில்லை என்று அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக பேர்ஸ்டோவ் விக்கெட்டை சர்ச்சையான முறையில் அலெக்ஸ் கேரி ரன் அவுட் செய்ததும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
இப்போட்டியில் 371 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 193 ரன்களுக்கு 5 விக்கெடுகளை இழந்திருந்த போது களத்தில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் இருந்தனர். இருவரின் பார்ட்னர்ஷிப்பும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது இதற்கு பின்னர் வரும் வீரர்கள் பந்துவீச்சாளர்கள் என்பதால் ஆஸ்திரேலியா அணியும் இவர்களது பார்ட்னர்ஷிப் உடைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.
அப்போது பேர்ஸ்டோவ், கிரீஸ் உள்ளே நன்றாக பேட்டை வைத்துவிட்டு களத்தை விட்டு சற்று வெளியே வந்தவுடன் அலெக்ஸ் கேரி ஸ்டம்பை நோக்கி எரிந்து ரன் அவுட் கேட்டார். களத்தில் இருந்த நடுவர்கள் மூன்றாம் நடுவரிடம் இந்த முடிவுக்கு தீர்ப்பு கேட்டனர். மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்ததார். இங்கிலாந்து ரசிகர்கள் மற்றும் அணியினர் மத்தியில் குழப்பம் நிலவியது.