
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே 2 போட்டிகளில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றிருந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ட்ஸில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மிச்சல் மார்ஸ் 118 ரன்கள் குறித்து பேட்டிங்கில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தார். அதன்பின் முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தட்டுத்தடுமாறி 237 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே இறுதிவரை போராடி 80 ரன்களுக்கு அவுட் ஆனார். கேப்டன் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி பந்துவீச்சில் அசத்தினார்.
இதன்மூலம் 26 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 224 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. 250 ரன்கள் முன்னிலை பெற்று 251 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை. அதிகபட்சமாக ஜாக் கிராலி 44 ரன்கள் அடித்தார். ஸ்டோக்ஸ், ஜோ ரூட் இருவரும் சொற்பொருள்களுக்கு வெளியேறினர்.