
நடப்பு ஐபிஎல் தொடருக்கும் முன்பாக நடைபெற்ற மினி ஏலத்தில் 16.25 கோடிக்கு இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் மினி ஏலத்தில் அவரை வாங்கியதும் அது அந்த அணி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கியது.
ஆனால் ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே அவர் ஐபிஎல் தொடரில் சில ஆட்டங்களில் பந்து வீசமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு அடுத்து அவர் முதல் ஆட்டம் தாண்டி பந்து வீசினாலும், அவரது பேட்டிங் செயல்பாடு சிறப்பாக எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை.
இந்த நிலையில் அவர் காயமடைய வான்கடேவில் மும்பைக்கு எதிரான போட்டியில் ரகானே வந்து கலக்கி அவர் அணியில் இடம் பிடித்தார். அதிலிருந்து தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் அணியில் வெளியே இருக்கிறார்.இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணி லீக் சுற்றில் டெல்லிக்கு எதிராகக் தனது கடைசி ஆட்டத்தை விளையாடியதும் முடிவு எப்படியாக இருந்தாலும், அவர் இங்கிலாந்துக்கு திரும்புவதாக செய்திகள் தெரிவிக்கிறது.