Advertisement

கம்பேக்கில் காட்டடி பேட்டிங்; எதிரணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பென் ஸ்டோக்ஸ்! 

இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 13, 2023 • 21:52 PM
கம்பேக்கில் காட்டடி பேட்டிங்; எதிரணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பென் ஸ்டோக்ஸ்! 
கம்பேக்கில் காட்டடி பேட்டிங்; எதிரணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பென் ஸ்டோக்ஸ்!  (Image Source: Google)
Advertisement

தற்பொழுது இங்கிலாந்து அணி உள்நாட்டில், நியூசிலாந்து அணிக்கு எதிராக தலா நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில்,உலகக் கோப்பை முன்பாக விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிந்தது. இந்த நிலையில் அடுத்த நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா ஒரு போட்டியை வென்று இருந்தன.

இந்த நிலையில் இன்று தொடரின் மூன்றாவது போட்டிநடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று நியூசிலாந்து பந்து வீசுவது என முடிவு செய்தது. நியூசிலாந்தின் முடிவு சரி என்பதாக, அந்த அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் ஜானி பேர்ஸ்டோவை முதல் பந்தில் வெளியேற்றினார். அடுத்து வந்த ஜோ ரூட்டை 4 ரன்னில் வெளியேற்றினார்.

Trending


இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த டேவிட் மலான் மற்றும் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து இங்கிலாந்து அணிக்கு பெரிய ரன் கொண்டு வந்தார்கள். மிகச் சிறப்பாக விளையாடிய டேவிட் மலான் 96 ரன்களில், திரும்ப பந்து வீச வந்த போல்ட் இடம் ஆட்டம் இழந்தார். இதற்கு நடுவே மிக சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக 76 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 

மேற்கொண்டு மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 16 பந்துகளில் 150 ரன்கள் கொண்டு வந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த பென் ஸ்டோக்ஸ் இறுதியாக 124 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் 182 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 48.1 ஓவரில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 368 ரன்கள் குவித்தது. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்தார். இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்காக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொள்ள அவர் மீண்டும் திரும்ப வந்தார். 15 மாதங்கள் கழித்து திரும்ப வந்து, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்ற பென் ஸ்டோக்ஸ் தற்பொழுது அதிரடியான பெரிய சதத்தை அடித்திருக்கிறார். 

 

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். முதல் இடத்தில் 189 ரன்கள் உடன் வெஸ்ட் இண்டீஸ் ரிச்சர்ட்ஸ் இருக்கிறார். இத்தோடு இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற தனிச் சாதனையை படைத்திருக்கிறார். இவரது மறுவருகை உலகக்கோப்பை அணிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவே இருக்கிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement