Advertisement
Advertisement
Advertisement

PAK vs ENG: முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் பங்கேற்பது சந்தேகம்?

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 7ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இப்போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டொக்ஸ் பங்கேற்பாரா என்ற து சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
PAK vs ENG: முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் பங்கேற்பது சந்தேகம்?
PAK vs ENG: முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் பங்கேற்பது சந்தேகம்? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 04, 2024 • 10:22 PM

இங்கிலாந்து டெஸ்ட் அணி கடந்த மாதம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 04, 2024 • 10:22 PM

இதனையடுத்து இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் தொடரானது அக்டோபர் 28ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது போட்டி மட்டும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. 

Trending

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் அணிகள் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தன. இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் செய்தியாக தற்போது மாறியுள்ளது. 

முன்னதாக இங்கிலாந்தில் இந்தாண்டு நடைபெற்று முடிந்த தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நார்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக பென் ஸ்டோக்ஸ் விளையாடிய நிலையில், அத்தொடரில் காயமடைந்தார். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமானதை தொடர்ந்து, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகினார். இதனால் இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனாக ஒல்லி போப் நியமிக்கப்பட்டிருந்தர். 

இதையடுத்து காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள பென் ஸ்டோக்ஸ், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்ததுடன், அணியின் கேப்டனாகவும் செயல்படவுள்ளது. இந்நிலையில் தான் பென் ஸ்டோக்ஸ் இன்னும் தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்றும், அதனால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்றும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளன.

ஏனெனில் இப்போட்டி தொடங்க இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் பென் ஸ்டோக்ஸ் குறித்து வெளியாகியுள்ள இத்தகவல் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை பென் ஸ்டோக்ஸ் இப்போட்டியில் விளையாடாத பட்சத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை ஒல்லி போப் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கே), ரெஹான் அஹ்மத், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி ப்ரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டன் காக்ஸ், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜோஷ் ஹல், ஜேக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

Also Read: Funding To Save Test Cricket

முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கேப்டன்), சௌத் ஷகீல், அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், மிர் ஹம்சா, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, நோமன் அலி, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃப்ராஸ் அகமது, ஷஹீன் ஷா அஃப்ரிடி. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement