
Ben Stokes To Sit Out IPL 2022 Auctions; Reports (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 4-0 எனத் தோல்வியடைந்துள்ளது இங்கிலாந்து அணி. ஹோபர்டில் நடைபெற்ற 5ஆவது டெஸ்டை 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரு கேப்டன் ரூட் மற்றும் துணைக்கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு சிறுது கால அவகாசம் தேவைப்படுகிறது.