
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த முறையும் சென்னை அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக செயல்படவுள்ளார். இந்த தொடருடன், தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே 14 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம்தான் தோனி விளையாடும் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடந்த முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை அணி நிர்வாகம் ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது.
தோனிக்கு பின்னர் கேப்டன் பொறுப்பு ஸ்டோக்சிற்கு வழங்கப்படலாம் என்று ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி பகுதியில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது.