-mdl.jpg)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆஷஸ் தொடரை 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில் நடப்பாண்டு ஆஷஸ் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில் காயம் காரணமாக தொடர் முழுவதும் விளையாடவில்லை.
ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடினாலும் மிகப்பெரிய அளவில் பந்து வீசவில்லை. இதனால் ஆஷஸ் தொடரிலும் பந்து வீசுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தான் உடற்தகுதி பெற்றுவிட்டதாகவும், ஆஷஸ் தொடரில் பந்து வீசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸின் இந்த அறிவிப்பு இங்கிலாந்து அணிக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.