
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற வேண்டும் என்ற வேட்கையில் இந்திய வீரர்கள் பலர் அருமையாக ஆடிவருகின்றனர்.
நடராஜன், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல் ஆகிய பவுலர்கள் அபாரமாக பந்துவீசிவருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, காயத்திலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸுடன் மீண்டும் களத்திற்கு வந்து குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார்.
பேட்டிங், பவுலிங், கேப்டன்சி என அனைத்து வகையிலும் குஜராத் டைட்டன்ஸுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துவருகிறார் ஹர்திக் பாண்டியா. 6 போட்டிகளில் 295 ரன்களை குவித்து, இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார் ஹர்திக் பாண்டியா. கேஎல் ராகுல், ஃபாஃப் டுப்ளெசிஸ், பிரித்வி ஷா ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே பாண்டியாவிற்கு பின்னால் தான் உள்ளனர்.