Advertisement

BGT 2024-25: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement
BGT 2024-25: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
BGT 2024-25: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 26, 2024 • 02:48 PM

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட்  தொடரின் முதல் போட்டி பெர்த்தில் உள்ள் ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், ஆஸ்திரேலிய அணியும் 104 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 46 ரன்கள் பின் தங்கியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 26, 2024 • 02:48 PM

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோரது சதங்கள் காரணமாக 487 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்களையும், விராட் கோலி 100 ரன்களையும் சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளைடினார். 

Trending

இதில் டிரவிஸ் ஹெட் 89 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 47 ரன்களையும், அலெக்ஸ் கேரி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனா; அந்த அணி 238 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பலிரவு ஆட்டமாக டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதேசமயம் முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த மிட்செல் மார்ஷுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது உடற்தகுதி குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். இருப்பினும் அணியின் பிளேயிங் லெவனில் ஏதேனும் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement