
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 208 ரன்களை குவித்தும் கூட தோல்வியை தழுவியது. 209 ரன்கள் என்ற கடினமான இலக்கை அடிக்கவிடாமல் ஆஸ்திரேலியாவில் தடுக்கமுடியாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என இரண்டிலும் இந்திய அணி சொதப்பியது. இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் இணைந்து 8 ஓவரில் 101 ரன்களை வாரி வழங்கினர். புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 52 ரன்களும், ஹர்ஷல் படேல் 4 ஓவரில் 49 ரன்களும் வழங்கிய நிலையில் இருவருமே விக்கெட் வீழ்த்தவில்லை.
அதிலும் 19ஆவது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் அந்த ஓவரில் 16 ரன்களை வழங்கினார். அந்த ஓவரிலேயே கிட்டத்தட்ட போட்டி முடிந்துவிட்டது. இதையே தான் புவனேஷ்வர் குமார் தொடர்ச்சியாக செய்துவருகிறார். அது இந்திய அணிக்கு கவலையளிக்கிறது.