
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்காளூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறிய நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் குர்னால் பாண்டியா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய புவனேஷ்வர் குமார் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவிச்சாளர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா 192 போட்டிகளில் விளையாடி 192 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார்.