
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான புவனேஸ்வர் குமார் கடந்த 2012-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 121 ஒருநாள் போட்டிகள், 21 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 87 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் இவர் மொத்தமாக கிட்டத்தட்ட 300 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், தற்போது 33 வயதான புவனேஸ்வர் குமார் இன்றளவும் தனது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் ஓவர் உலகக் கோப்பை தொடரில் அவருக்கு இடம் கிடைக்காத வேளையில் அவர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி தொடரில் உத்தர பிரதேஷ் அணிக்காக களம் இறங்கி விளையாடி வருகிறார். இந்நிலையில் கர்நாடக அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஒரு முக்கிய போட்டியில் புவனேஸ்வர் குமார் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி உள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.