
Big Bash League To Begin On December 5, Schedule Announced (Image Source: Google)
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடர்களைப் போலாவே பல நாடுகள் தங்கள் நாடுகளில் டி20 லீக் போட்டிகளை நடத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிக் பேஷ் லீக் தொடர் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாகும்.
அதன்படி இதுவரை 10 சீசன்களைக் கடந்துள்ள பிக் பேஷ் தொடரின் 11ஆவது சீசனுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி பிக் பேஷ் லீக் தோடரின் 11ஆவது சீசன் 8 அணிகளுடன் டிசம்பர் 5, அடுத்தாண்டு ஜனவரி 28ஆம் தெதி வரையில் நடைபெறுகிறது. மேலும் இத்தொடரின் லீக் ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவிலுள்ள 14 இடங்களிலும், பிளே ஆஃப் சுற்றுக்கான இடங்கள் பின்னர் அறிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.