காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர் விலகல்; மாற்று வீரர் அறிவிப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானி காயம் காரணமாக விலகினார்.
ஆசியக் கோப்பை 2022இன் லீக் ஆட்டங்கள் முழுமையாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த லீக் சுற்றில் ஹாங்ஹாங் அணியும், வங்கதேச அணியும் சிறப்பாக செயல்படாததால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறவில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் அணிகள்தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றன.
ஆசியக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக பந்துவீசி, பாகிஸ்தானை 147 ரன்களுக்கு சுருட்டி, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், இந்த இரண்டு அணிகளும் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் நாளை மோதவுள்ளன. இதில் இந்தியாவே ஜெயிக்குமா அல்லது பாகிஸ்தான் அணி பதிலடி கொடுக்கும் வகையில் வெற்றி பெறுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
Trending
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானி, காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவர், லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக 4 ஓவர்களை வீசி 29 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். மேலும் கடைசி இடத்தில் களமிறங்கி பேட்டிங்கில் 6 பந்துகளில் 2 சிக்ஸர்களை அடித்து 16 ரன்களை சேர்த்திருந்தார்.
இப்பேர்ப்பட்ட சிறந்த வேகப்பந்து வீச்சாளர் தற்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்க முடியாதது, பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மாற்று வீரராக ஹசன் அலி சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சமீப காலமாக சிறப்பாக செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now