Advertisement

கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்ற  ‘மிஸ்டர் 360’ - கிரிக்கெட் வீரர்களின் வாழ்த்து!

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகுவதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளதை அடுத்து பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றன. 

Advertisement
Big relief for bowlers, thank you for great memories: Rashid Khan to AB de Villiers
Big relief for bowlers, thank you for great memories: Rashid Khan to AB de Villiers (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 19, 2021 • 10:16 PM

தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி மன்னனாக விளங்கிய ஏபிடி வில்லியர்ஸ் கடந்த 2019ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தாலும், ஐபிஎல், பிக் பேஷ் உள்ளிட்ட டி20 லீக் தொடர்களில் மட்டும் விளையாடி வந்தார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 19, 2021 • 10:16 PM

இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக டிவில்லியர்ஸ் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துச் செய்திகளை தெரிவித்து வருகின்றனர். 

Trending

அந்த வகையில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், “டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றதால் இனி எங்களை போன்ற பந்துவீச்சாளர்களுக்கு மகிழ்ச்சி தான் என்று குறிப்பிட்ட அவர், டிவில்லியர்ஸை மிஸ் செய்வதாக கூறியுள்ளார்

இங்கிலாந்து அதிரடி வீரர் ஜாஸ் பட்லர் டிவில்லியர்சின் ஓய்வு குறித்து பதிவிட்டுள்ள ட்விட்டில், டிவில்லியர்ஸ் ஆட்டத்தை பார்க்க தான் சின்ன வயதில் டி.வி.யே பார்ப்பேன் என்று தெரிவித்து, ஓய்வு காலத்தை மகிழ்ச்சியாக செலவளியுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சாம் பில்லிங்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் , டிவில்லியர்ஸை பார்த்து தான் நான் வளர்ந்ததாக பாராட்டியுள்ளார். கிரிக்கெட்டை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றவர் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய சுழற்பந்துவீச்சின் ஜாம்பவானான அனில்கும்ப்ளே வெளியிட்டுள்ள பதிவில் , தங்களுடைய இரண்டாவது இன்னிங்சிற்கு வாழ்த்துக்கள் என்றும், உங்களது அனல் பறக்கும் ஆட்டத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன், சில சமயம் பந்துவீசும் போது பாதிக்கவும் பட்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

Also Read: T20 World Cup 2021

டிவில்லியர்ஸ் உடன் இணைந்து விளையாடியது என் வாழ்நாள் பெருமையாக உண்ர்வதாக தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டுமினி கருத்து தெரிவித்துள்ளார். டிவில்லியர்சின் பயணம் சிறப்பு மிக்க பயணம் என்றும், ஓய்வு நாளை கொண்டாடுங்கள் என்றும் டுமினி கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement