கொல்கத்தாவில் இருந்து அஹ்மதாபாத்திற்கு மாறும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி!
ஐபிஎல் 2025 இன் இறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனுக்குப் பதிலாக அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனால் ஐபிஎல் தொடரானது மீண்டும் எப்போது தொடங்கும், இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா? அல்லது வேறு நாட்டிற்கு மாற்றியமைக்கப்படுமா என்ற கேள்விகள் எழத்தொடங்கின. இந்நிலையில் ஐபிஎல் தொடரானது திட்டமிட்டப்படி அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை அடுத்த வாரம் முதல் தொடகும் வேலைகளில் பிசிசிஐ இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் போட்டிகளை தென் இந்தியாவில் மட்டும் நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும், எஞ்சிய போட்டிகளுக்கான மறு அட்டவணையை பிசிசிஐ கூடிய விரைவில் அறிவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஐபிஎல் 2025 இன் இறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனுக்குப் பதிலாக அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் கொல்கல்த்தாவில் மழை குறுக்கீடு இருக்கும் என்பதன் காரணமாக இத்தொடரின் இறுதிப் போட்டியை கொல்கத்தாவிலிருந்து அஹ்மதாபாத்திற்கு மாற்றுவது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.
முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போட்டி அட்டவணையின் படி கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சாம்பியன் பட்டத்தை வென்றதன் காரணமாக இறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்போது வானிலை மற்றும் பாதுகாப்பு காரணமாக தற்சமயம் போட்டிக்கான மைதானம் மாற்றியமைக்கபடவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் எஞ்சிய போட்டிகளுக்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
மேற்கொண்டு ஐபிஎல் தொட்ரில் லக்னோவில் நடைபெறும் போட்டிகளில் எந்த மாற்றங்களும் இல்லை என்றும், டெல்லி மற்றும் தர்மசாலாவில் இனி எந்த போட்டிகளும் நடைபெறாது என்றும் கூறப்படுகிறது. அனைத்து பங்குதாரர்கள், உரிமையாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் மாநில சங்கங்களுடன் கலந்துரையாடிய பின்னர் அரசாங்க ஒப்புதல் பெறப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now