பயோ பபுள் சூழல் அணியில் பிணைப்பை ஏற்படுத்துகிறது - ரோஹித் சர்மா
பயோ பபுள் சூழலில் இருக்கும் போது அணி வீரர்களின் பிணைப்பும், ஒற்றுமையும் அதிகரிப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில், இன்று சென்னையில் நடக்கிறது. சீசனின் முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களின்றி நடத்தப்படும் இப்போட்டி, இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், பயோ பபுள் சூழலில் இருக்கும் போது அணி வீரர்களின் பிணைப்பும், ஒற்றுமையும் அதிகரிப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய ரோஹித், “முந்தைய ஐபிஎல் சீசனில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் யாரும் அறையிலிருந்து வெளியே வரமாட்டார்கள். ஆனால் இம்முறை எங்களுக்கு குழு அறை ஒன்று உள்ளது. இதனால் நாங்கள் ஒவ்வொருவருடைய செயல்கள் குறித்து ஆலோசனை நடத்த உதவியாக அமைந்துள்ளது. மேலும் வீரர்களுக்கிடையிலான பிணைப்பு மற்றும் ஒற்றுமை அதிகரிக்கவும் ஏதுவாக அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now