
Blow For SRH As Washington Sundar Likely To Be Ruled For At Least A Week (Image Source: Google)
வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் ரூ. 8.75 கோடிக்குத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி. ஐபிஎல் 2022 போட்டியில் இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் 4 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார்.
இந்நிலையில் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் சன்ரைசர்ஸ் அணியின் அடுத்த இரு ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் என்று அறியப்படுகிறது.
வாஷிங்டனின் காயம் ஒரு வாரத்தில் குணமாகிவிடும் என எதிர்பார்க்கிறோம் என்று சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கூறியுள்ளார்.