ஐசிசி தொடரை நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது - ரமீஸ் ராஜா
2025ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, டி20 20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.
இந்நிலையில் 2024 முதல் 2031ஆம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐசிசி போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது.
2025ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசியின் பெரிய தொடரை அந்த நாடு நடத்துகிறது.
கடைசியாக 1996ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தி இருந்தது.
இந்த நிலையில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
Also Read: T20 World Cup 2021
இதுகுறித்து பேசிய அவர், “2025 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. இந்த செய்தி பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் உலக ரசிகர்களை நிச்சயம் உற்சாகப்படுத்தும். நாங்கள் இந்த போட்டியை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி எங்களது திறமையை வெளிப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now