
Bouchier, Dean earn first England call-ups for home New Zealand series (Image Source: Google)
நியூசிலாந்து மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறுகிறது.
இத்தொடருக்கு சோபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இங்கிலாந்து வந்தடைந்து தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நியூசிலாந்துடனான டி20 தொடருக்கான 15 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மாயா பௌச்சியர், சார்லி டீன் ஆகியோர் அறிமுக வீராங்கனைகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.