
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி குசல் பெரெரா மற்றும் தீக்சனாவின் ஆட்டத்தால் 46.4 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. நியூசிலாந்து அணி தரப்பில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 23.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணியை 8வது முறையாக தொடர்ந்து நியூசிலாந்து அணி வீழ்த்தி அசத்தியுள்ளது. இதனிடையே இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்து வெற்றிக்கு காரணமாக அமைந்த போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.