
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவை இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைந்துள்ளது. இனி பாகிஸ்தான் உள்பட பிற அணிகள் தோல்வி அடைந்தால் மட்டுமே இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய தசுன் ஷனகா, இந்திய அணியை வீழ்த்த போடப்பட்ட திட்டம் குறித்துப் பேசினார். “அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இதுதான் எங்களின் மன உறுதியை அதிகப்படுத்தியது. அணியின் பேட்டிங் யூனிட் இப்போட்டியை சிறப்பாக முடித்துக்கொடுத்தது. தில்சன் மதுஷங்கா, தீக்ஷனா இருவரும் ஓபனிங் ஓவர்களை அபாரமாக வீசினார்கள்.
இந்திய பேட்டர்கள் அதிரடியாக விளையாடியபோதும், 173 ரன்களுக்கு அவர்களை கட்டுப்படுத்திவிட்டோம். சமிகா கருணரத்னே சிறந்த திட்டத்தோடு வந்தார். இதனால், அவரை நான்கு ஓவர்களை வீச வைத்தோம். அவரும் 4 ஓவர்களில் 27/2 பெஸ்ட் பந்துவீச்சை பதிவு செய்தார்.