Advertisement

பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

Advertisement
Boxing Day Test: Australia won the Test series against South Africa after 16 long years in Australia
Boxing Day Test: Australia won the Test series against South Africa after 16 long years in Australia (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 29, 2022 • 10:19 AM

ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன் குவித்து இருந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 29, 2022 • 10:19 AM

டேவிட் வார்னர் தனது 100ஆவது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். அவர் 200 ரன்னில் காயத்தால் வெளியேறினார். ஸ்டீவ் சுமித் 85 ரன் எடுத்தார். டிரெவிஸ் ஹெட் 48 ரன்னும், அலெக்ஸ் கேரி 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அதன்பின் நேற்று நடைபெற்ற 3ஆவது நாள் ஆட்டம் நடந்தது. ஹெட் 7 பவுண்டரி , 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அவர் 51 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் இழந்தார். 6ஆவது வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சிறப்பாக ஆடி சதம் அடித்தார். அவர் 133 பந்தில் 13 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 14ஆவது டெஸ்டில் விளையாடும் அலெக்ஸ் கேரிக்கு இது முதல் சதமாகும்.

Trending

இதற்கு முன்பு 93 ரன் எடுத்ததே அதிகபட்சமாகும். 8வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியும், கேமரூனும் 100 ரன் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இது தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோரை விட 386 ரன் கூடுதலாகும்.தென் ஆப்பிரிக்க தரப்பில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் டீன் எல்கர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சரெல் எர்வி - டி பிரையன் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

பின்னர் 7 ஓவர்களுக்கு தென் ஆப்பிரிக்க அணி 15 ரன்களை எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதன் காரணமாக இப்போட்டி பாதிக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் மூன்றாம் நாள் ஆட்டம் அத்துடன் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை சரெல் எர்வி 7 ரன்களுடனும், டி பிரையன் 6 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் 21 ரன்களில் எர்வியும், 28 ரன்களில் டி பிரையனும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஸோண்டோவும் ஒரு ரன்னுடம் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டெம்பா பவுமா - கெய்ல் வெர்ரையன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெம்பா பவுமா அரைசதம் கடந்து அசத்தினார். இதையடுத்து வெர்ரையன் 33 ரன்களில் ஆட்டமிழக்க, 65 ரன்கள் சேர்த்திருந்த டெம்பா பவுமாவும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்களாலும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 3 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலாண்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement