பிபிஎல் 2022: பரபரப்பான ஆட்டத்தில் கோப்பையை வென்றது கொமிலா விக்டோரியன்ஸ்!
பிபிஎல் 2022: பார்ச்சூன் பாரிஷால் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் கொமிலா விக்டோரியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பங்களதேஷ் பிரீமிய லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் இன்றுடன் முடிவடைந்தது.
இதில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொமிலா விக்டோரியன்ஸ் - பார்ச்சூன் பாரிஷால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
Trending
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொமிலா விக்டோரியன்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரைன் 23 பந்துகளில் 57 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொமிலா விக்டோரியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களைச் சேர்த்தது. பார்ச்சூன் பாரிஷால் அணி தரப்பில் முஜீப், ஷாஃபிகுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய பார்ச்சூன் பாரிஷால் அணியின் தொடக்க வீரர் முனிம் ஷரிஹர் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கிறிஸ் கெயில் -ஷைகத் அலி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் கிறிஸ் கெயில் 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்திருந்த ஷைகத் அலியும் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய வீரர்களும் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறினர்.
இதனால் பார்ச்சூன் பாரிஷால் அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. கொமிலா அணி தரப்பில் கடைசி ஓவரை வீசிய ஷோஹிதுல் இஸ்லாம் 8 ரன்களை மட்டுமே கொடுத்தார்.
இதன்மூலம் கொமிலா விக்டோரியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பார்ச்சூன் பாரிஷாலை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்ததுடன் பங்கதேஷ் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now