வீரர்கள் சிறப்பாக செயல்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - மைக்கேல் பிரேஸ்வெல்!
இது ஒரு மகிழ்ச்சியான நாளாக இருந்தது, சீசனை சிறப்பாக முடித்தது எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தது என நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் கூறியுள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுண்ட் மாங்னூயில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ரைஸ் மாரியூ அரைசதம் கடந்து அசத்தினார். இதில் அவர் 58 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெலும் அரைசதம் கடந்ததுடன் 59 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களைச் சேர்த்தது.
Trending
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் 50 ரன்களையும், முகமது ரிஸ்வான் 37 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 33 மற்றும் தயப் தாஹிர் தலா 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் பாகிஸ்தான் அணி 40 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 221 ரன்களில் ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பென் சீயர்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜேக்கப் டஃபி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுடன், ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை மைக்கேல் பிரேஸ்வெல்லும், தொடர் நாயகன் விருதை பென் சீயர்ஸூம் கைப்பற்றினர்.
இப்போட்டி குறித்து பேசிய மைக்கேல் பிரேஸ்வெல், “இது ஒரு மகிழ்ச்சியான நாளாக இருந்தது, சீசனை சிறப்பாக முடித்தது எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு பெரிய கூட்டத்தின் முன் ஒரு நல்ல செயல்திறனை வெளிப்படுத்த விரும்பினோம், அதைச் செய்ய முடிந்ததற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இப்போட்டிக்கான விக்கெட் நன்றாக இருந்தது. ஏனெனில் இடைவிடாத மழைக்கு பிறகும் மைதானம் சிறப்பாக இருந்தது. இதற்காக மைதான ஊழியர்களுக்கு நன்றி.
Also Read: Funding To Save Test Cricket
இந்த போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்டிருந்தாலும், இது சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடந்த ஒரு போட்டியாகவே அமைந்தது. குறைந்த எண்ணிக்கையிலான வளங்களுடன், நீங்கள் கொஞ்சம் முன்னதாகவே கால் வைக்க வாய்ப்பு கிடைக்கும். வீரர்கள் வந்து சிறப்பாக செயல்படுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் தொடரை வெல்வது கூடுதல் போனஸ். வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வீரர்கள் முன்னேறுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now