Advertisement

PAK vs NZ: நியூசிலாந்து டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமனம்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 03, 2024 • 14:11 PM
PAK vs NZ: நியூசிலாந்து டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமனம்!
PAK vs NZ: நியூசிலாந்து டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமனம்! (Image Source: Google)
Advertisement

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் குழுக்களை ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இத்தொடரானது ஜூன் 01ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

இத்தொடருக்கான அனைத்து அணிகளும் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி உலகக்கோப்பை தொடருக்காக தங்களைத் தயார்ப்படுத்தி வருகிறது. அந்தவகையில், நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகாள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரானது வரும் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Trending


மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி பாகிஸ்தான் செல்லும் நியூசிலாந்து அணியானது இரண்டுநாள் பயிற்சிக்கு பிறகு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த கேன் வில்லியம்சன், டிரெண்ட் போல்ட், லோக்கி ஃபார்குசன், கிளென் பிலீப்ஸ் மிட்செல் சாண்ட்னர், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திர போன்ற நட்சத்திர வீரர்கள் பங்கேற்றுள்ளதால் அவர்களுக்கு இத்தொடரிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக் நியூசிலாந்து அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் ஃபின் ஆலன், டிம் செய்ஃபெர்ட், மார்க் சாப்மேன், பென் லிஸ்டர், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், இஷ் சோதி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியில் அறிமுக வீர்ர்கள் டிம் ராபின்சன், வில்லியம் ஓ ரூர்க் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து டி20 அணி: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், பென் லிஸ்டர், கோல் மெக்கன்சி, ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், வில்லியம் ஓ ரூர்க், டிம் ராபின்சன், பென் சியர்ஸ், டிம் செய்ஃபெர்ட், இஷ் சோதி

பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடர் அட்டவணை

  • ஏப்ரல் 18 - முதல் டி20, ராவல்பிண்டி
  • ஏப்ரல் 20- 2ஆவது டி20, ராவல்பிண்டி
  • ஏப்ரல் 21- 3ஆவது டி20, ராவல்பிண்டி
  • ஏப்ரல் 25 - 4ஆவது டி20, லாகூர்
  • ஏப்ரல் 27 - 5ஆவது டி20, லாகூர்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement