Advertisement
Advertisement

காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய பிராண்டன் கிங்; விண்டீஸுக்கு பெரும் பின்னடைவு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தின் போது காயமடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராண்டன் கிங், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்தும் விலகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 20, 2024 • 11:18 AM
காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய பிராண்டன் கிங்; விண்டீஸுக்கு பெரும் பின்னடைவு!
காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய பிராண்டன் கிங்; விண்டீஸுக்கு பெரும் பின்னடைவு! (Image Source: Google)
Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் பிராண்டன் கிங் காயம் காரணமாக 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.

அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 38 ரன்களுக்கும், அதைத்தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இறுதியில் ரூதர்போர்டு அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைக் குவித்தது. அதன்பின் 181 ரன்கள் என இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Trending


இதில் கேப்டன் ஜோஸ் பட்லர் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மொயீன் அலியும் 13 ரன்களில் நடையைக் கட்டினார். இருப்பினும் அதிரடியாக விளையாடி வந்த பில் சால்ட் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 87 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

இந்நிலையில் இப்போட்டியின் போது காயமடைந்த பிராண்டன் கிங் பாதியிலேயெ களத்திலிருந்து வெளியேறினார். மேலும் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய சில வாரங்கள் எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலும் பிராண்டன் கிங் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை பிராண்டன் கிங் தொடரிலிருந்து விலகும் பட்சத்தில் அது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். 

ஏனெனில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரராக பிரண்டன் கிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும் பிராண்டன் கிங் அபாரமாக செயல்பட்டுள்ளதால், அவரது சேவையானது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிச்சயம் தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement