
நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்சி பொறுப்பில் இருந்து மகேந்திரசிங் தோனி விலகிக் கொண்டார். இதனால், அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொண்ட தோனி, பேட்டிங்கில் இந்த முறை பேட்டிங்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களின் சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த காணொலி, தோனி, பிராவோ மற்றும் ருத்துராஜ் ஆகியோர் இருக்க, சில புகைப்படங்களை காட்டி அதற்கு விளக்கங்கள் கேட்கப்படுகிறது. இதில், பிராவோவுடன், தான் இருக்கும் புகைப்படம் பற்றி தோனி கலகலப்பாக சொன்னது வைரலாகி வருகிறது.
"இத்தனை ஆண்டுகளில், நான் பிராவோவிடம் எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்று சொன்னதே இல்லை. ஆனால், எப்படி பவுலிங் போடக்கூடாது என்று சொல்லியுள்ளேன். எப்படி வேண்டுமானாலும் பந்து வீசுங்கள். ஆனால், சில வேரியேஷன்களை முயற்சி செய்ய வேண்டாம் என கூறுவேன்.