எஸ்ஏ20 2024: ஜூனியர் தாலா அபார பந்துவீச்சு; தொடர் வெற்றிகளை குவிக்கும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
தென் ஆப்பிரிக்காவின் உள்ளுர் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மேத்யூ பிரீட்ஸ்கி - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பிரீட்ஸ்கி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த, மறுபக்கம் டோனி டி ஸோர்ஸி 8 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய குயின்டன் டி காக் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து இப்போட்டியிலும் ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதன்பின் பிரீட்ஸ்கியுடன் இணைந்த ஹென்ரிச் கிளாசென் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் மேத்யூ பிரீட்ஸ்கி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையடைய ஹென்ரிச் கிளாசென் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என ஹென்ரிச் கிளாசென் 30 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 73 ரன்களைச் சேர்த்திருந்த மேத்யூ பிரீட்ஸ்கியும் விக்கெட்டை இழந்தார்.
Trending
இதையடுத்து களமிறங்கிய கீமோ பால் ரன்கள் ஏதுமின்றியும், வியான் முல்டர் 2 ரன்களுக்கும், கேப்டன் கேசவ் மகாராஜ் 8 ரன்களுக்கும், ஜூனியர் தாலா மற்றும் நூர் அஹ்மாத் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, இறுதியில் ஜேஜே ஸ்மாட்ஸ் 21 ரன்களையும், நவீன் உல் ஹக் 10 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் டேரின் டுபாவில்லன் மற்றும் செனூரன் முத்துசாமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த வில் ஜேக்ஸ் - கைல் வெர்ரைன் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தின். இதில் வெர்ரைன் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் ஜேக்ஸ் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதனைத்தொடர்ந்து ரைலீ ரூஸோவ் 10 ரன்களுக்கும், காலின் அக்கர்மேன் 7 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட காலின் இங்ரம் 10 ரன்களிலும் செனுராம் முத்துசாமி 9 ரன்களிலும், வெய்ன் பார்னெல் 12 ரன்களிலும் ஈதன் போஷ் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க, கடைசி வரை போராடிய ஆதில் ரஷித் 2 பவுண்டரி ஒரு சிக்சர் என 19 ரன்களை சேர்த்த நிலையிலும் அந்த அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் கேப்பிட்டல்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. டர்பன் அணி தரப்பில் ஜூனியர் தலா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய 9 போட்டிகளில் 7 வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய மேத்யூ பிரீட்ஸ்கி ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now