
Brendon McCullum's Appointment As England Head Coach Is An 'Exciting Decision', Reckons Nasser Hussa (Image Source: Google)
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 0-4 என்ற கணக்கில் படுதோல்வியடைந்ததையடுத்து, தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கிறிஸ் சில்வர்வுட் நீக்கப்பட்டார். ஜோ ரூட்டும் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், இங்கிலாந்தின் டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 அணிகளுக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் செயல்படவுள்ளனர்.
மேலும் நியூசிலாந்துக்கு எதிராக ஜூன் 2ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரிலிருந்து பயிற்சியாளர் பொறுப்பை மெக்கல்லம் ஏற்கவுள்ளார்.