
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தனா.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், இப்போட்டியில் இந்திய அணி விளையாட மறுத்தனர். இதனையடுத்து இந்நிலையில் ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்வதாக இத்தொடரின் ஏற்பாட்டாளர்கள் நேற்றைய தினம் அறிவித்தனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “WCL-ல் நாங்கள் எப்போதும் கிரிக்கெட்டை நேசித்து வருகிறோம், மேலும் எங்கள் ஒரே நோக்கம் ரசிகர்களுக்கு நல்ல மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை வழங்குவதாகும்.அதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டியைத் தொடர நினைத்தோம். ஆனால் இந்த செயல்பாடு, காரணமாக இந்திய ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.