
Brisbane Heat batsman Tom Banton to miss upcoming BBL (Image Source: Google)
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக் தொடரின் 11ஆவது சீசன் டிசம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக தற்போதிலிருந்தே பிபிஎல் அணிகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் நடப்பு சீசன் பிபிஎல் தொடரிலிருந்து இங்கிலாந்து அதிரடி வீரர் டாம் பாண்டன் விலகுவதாக அறிவித்துள்ளார். பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடிவரும் பாண்டன், தொடர் பயோ பபுள் சூழல் காரணமாக நடப்பு சீசனிலிருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து பிரிஸ்பேன் ஹீட் பயிற்சியாளர் வேட் செக்கோம்பே கூறுகையில், “தி ஹண்ட்ரட் தொடரின் போது டாம் பாண்டனின் நோக்கங்களைப் பற்றி நாங்கள் அவருடன் சில உரையாடல்களை நடத்தினோம். மேலும் அவருடைய முடிவை எடுக்க அவருக்கான நேரத்தையும் கொடுத்தோம்.