Advertisement

டி20 உலகக்கோப்பை 2022: ரோஹித் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு; பும்ரா, ஹர்ஷல் கம்பேக்!

டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Bumrah, Harshal Returns As India Names Team For T20 World Cup, T20I Series Against Australia & South
Bumrah, Harshal Returns As India Names Team For T20 World Cup, T20I Series Against Australia & South (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 12, 2022 • 08:00 PM

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் டி20 உலக கோப்பையை வெல்ல தீவிரமாக தயாராகிவருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 12, 2022 • 08:00 PM

டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியதால் இந்திய அணி தேர்வு குறித்த மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. 

Trending

முன்னாள் வீரர்கள் பலரும் அணிகளை தேர்வு செய்துவந்தனர். இந்நிலையில், இன்று ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் தலைமையிலான அணியில் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் போன்ற வழக்கமான வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக ஜடேஜா இத்தொடரில் விளையாடவில்லை. அதன்காரணமாக அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்பின்னர்களாக அஷ்வின், அக்ஸர் படேல், சாஹல் ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர்.

காயத்திலிருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர். புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷமி மெயின் அணியில் எடுக்கப்படவில்லை. ஆனால் கூடுதல் வீரராக எடுக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோரும் கூடுதல் வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

கூடுதல் வீரர்கள் - முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement