
Bumrah, Rana Reprimanded For Breaching IPL Code Of Conduct (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 14ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இதில் மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, நடப்புத் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் இப்போட்டியில் மும்பை வீரர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா ஆகிய இருவரும் நடத்தை விதிகளை மீறியதாக கள நடுவர்கள் புகார் அளித்தனர். இதன்பேரில் ஐபிஎல் நிர்வாகம் நடத்திய விசாரணையில், பும்ரா மற்றும் நிதிஷ் ராணா இருவரும் தங்களது தவறினை ஒப்புக்கொண்டனர்.