Advertisement

வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த பும்ரா!

முதுகு வலி பிரச்னை தொடர்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் பிரபல இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா.

Advertisement
Bumrah Undergoes Back Surgery In New Zealand, Could Resume Bowling By August: Report
Bumrah Undergoes Back Surgery In New Zealand, Could Resume Bowling By August: Report (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 08, 2023 • 10:24 PM

இந்திய அணியின் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக இருந்தவர் ஜஸ்ப்ரித் பும்ரா. தற்போது 29 வயதாகும் அவர், இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபகாலமாகக் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் டி20 உலகக் கோப்பை உள்பட பல ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 08, 2023 • 10:24 PM

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகக் கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார். பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சையும் பயிற்சியும் பெற்று வந்த பும்ரா, முழு உடற்தகுதியை அடைந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார். 

Trending

திடீர் திருப்பமாக, ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. பந்துவீசும் அளவுக்கான உடற்தகுதியை அடைய இன்னும் சிறிது காலம் தேவைப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டது. மும்பையில் பந்துவீச்சுப் பயிற்சி எடுத்தபோது தான் பும்ராவால் சர்வதேச ஆட்டத்தில் முழு உடற்தகுதியுடன் விளையாடுவது தற்போது சாத்தியமில்லை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அணியில் இருந்து அவர் விலகினார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர் ஆகியவற்றில் பும்ரா சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் முதுகுவலி பிரச்னை தொடர்பாக நியூசிலாந்தில் பும்ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் வரை நியூசிலாந்தில் தங்கவுள்ள பும்ரா அதன்பிறகு இந்தியாவில் அக்டோபர் - நவம்பரில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது. 

ஆகஸ்ட் முதல் பந்துவீச்சுப் பயிற்சியில் பும்ரா ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை தான் பும்ராவின் பிரச்னைக்கான தீர்வு என பிசிசிஐ மருத்துவக் குழு அறிவுறுத்தியதன் பேரில் நியூசிலாந்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் பும்ரா. இந்த அறுவை சிகிச்சையால் ஐபிஎல் மற்றும் ஜூன் 7 முதல் தொடங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் (இந்தியா தகுதி பெற்றால்) பும்ரா கலந்துகொள்ள மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement