
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 5ஆம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் ஜஸ்பிரித் பும்ரா பெரிய ஏமாற்றம் கொடுத்தார். பும்ரா பொதுவாக எந்த களமாக இருந்தாலும் மிக விரைவில் விக்கெட் எடுத்து கொடுக்கக் கூடியவர். ஆனால், சவுத்தாம்ப்டன் பிட்ச் தற்போது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த போதிலும், சரியான லெந்தில் பந்துவீசுவதில் அவர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
அதிலும் 5வது நாள் ஆட்டத்திலும் முதலில் சில பந்துகளை மிக ஷார்ட் லெந்த்தில் அவர் வீசி சொதப்பினார். பின்னர் அதனை சரிசெய்துகொண்டு மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். இந்நிலையில், பும்ராவை மீண்டும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். விமர்சனங்களுக்கு இந்த முறை அவர் ஜெர்ஸியை தவறாக அணிந்து வந்தது தான் காரணம்.