
Buttler, Stokes doubtful for T20Is against Pakistan, says Morgan (Image Source: Google)
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான பாகிஸ்தான் அணி கடந்த மாதம் தனி வீமானம் மூலம் இங்கிலாந்து சென்றடைந்தது.
இதற்கிடையில் இங்கிலாந்து அணி, இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்று அசத்தியது. இருப்பினும், இத்தொடரில் அதிரடி வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் விளையாடமல் தவிர்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியுடான தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்தொடரிலும் அவர்கள் விளையாடுவது சந்தேகம் என அந்த அணியின் கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.