மாலத்தீவிற்கு படையெடுக்கும் ஆஸி வீரர்கள், காரணம் இதுதான்!
ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் இந்தியாவில் இருந்து வேறு நாட்டிற்கு விமானத்தில் சென்று விட்டு, அதன் பிறகு அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர்
இந்தியாவில் கரோனா வைரஸ் 2ஆவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்தச் சூழலிலும் பாதுகாப்பாக ஐபிஎல் டி20 போட்டி நடந்தது.
வீரர்களுக்குப் பல அடுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு பயோ-பபுளில் தங்கவைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. ஆனால், பயோ-பபுள் சூழலையும் மீறி கரோனா பாதிப்புக்கு வீரர்கள் அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளாகினர்.
Trending
இதனால், அடுத்தடுத்து இரு போட்டிகளை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், பயோ-பபுளுக்குள் கரோனா வந்தபின் போட்டி நடத்துவது பாதுகாப்பில்லை என்பதால், ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவரது நலனை கருதி தான் இந்த முடிவை எடுத்ததாக பிசிசிஐ அறிவித்தது. அதுமட்டுமின்றி, இந்த ஐபிஎல்லில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் முழு பொறுப்பையும் பிசிசிஐ ஏற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆஸ்திரேலியாவிற்கு விமான சேவையை மே 15ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாடு திரும்புவதற்கு விமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பவதற்கான ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் அந்நாட்டு பிரதமர் மோரிசன் கூறியிருந்தனர். இதை மீறி ஆஸ்திரேலியாவிற்கு வரும் வீரர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்து இருந்தனர்.
ஆஸ்திரேலியா சார்பாக 14 வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று இருக்கின்றனர். இதையடுத்து பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என 40 ஆஸ்திரேலியர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் இந்தியாவில் இருந்து வேறு நாட்டிற்கு விமானத்தில் சென்று விட்டு, அதன் பிறகு அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். அதன்படி தற்போது அவர்கள் மாலத்தீவிற்கு செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். மாலத்தீவில் சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு பின்னர் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now