
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் கோப்பை காண 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தத் தொடரில் இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளுடன் சமநிலையில் தொடர் முடிவடைந்தது . கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியதால் வெற்றிக்கோப்பையை அந்த அணியே தக்க வைத்துக் கொண்டது.
மிகுந்த பரபரப்பு இடையே தொடங்கிய 5 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் ஆஸ்திரேலியா அணி பரபரப்பான நிலையில் வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் இரத்தானது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
கடந்த ஆண்டு முதலே இங்கிலாந்து அணி பின்பற்றி வரும் பேஸ்பால் என்ற அதிரடியான அணுகுமுறைக்கு டெஸ்ட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளை போல தாக்குதல் பாணி ஆட்டத்தை கடைபிடிக்கும் இந்த முறைக்கு டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த புதிய அணுகு முறையில் மூலம் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மேக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் அதிரடியான அணுகுமுறை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.