
Candice Warner Comes Up With An Indirect Jibe At Sunrisers Hyderabad (Image Source: Google)
துபாயில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றியும் அசத்தியது.
மேலும் இத்தொடரில் அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இத்தொடருக்கு முன்னதாக டேவிட் வார்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் வார்னர் சிறப்பாக விளையாடினார்.
இந்நிலையில் முதல் டி20 உலகக்கோப்பை பட்டத்தை வென்றதற்காக ஆஸ்திரேலிய அணியை வாழ்த்திய கேண்டீஸ், தனது மற்றொரு பதிவில், தனது கணவருக்கு வாழ்த்துக்களை அனுப்பினார்.