
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அந்த அணி 151 ரன்களை மட்டுமே எடுத்து, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதன்மூலம் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ஒரு வெற்றியை கூட பெறாத அணி என்ற சோகமான நிலையை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எட்டி இருக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவிய டெல்லி அணி தொடரில் இருந்து வெளியேறும் அபாயத்தில் இருக்கிறது. இனி விளையாட வேண்டிய ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர், “நான் டாஸ் வீசும்போது சொன்னேன்.நாங்கள் டேட்டிங் பந்துச்சு, பில்டிங் என மூன்றிலும் சரியாக செயல்பட வேண்டும் என்று கூறினேன்.ஆனால் நாங்கள் பேட்டிங்கில் ஆரம்ப கட்டத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இந்த இலக்கை எளிதாக அடைந்திருக்கலாம். ஆனால் நாங்கள் மோசமாக பேட்டிங்கில் செயல்பட்டோம்.