
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 212 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க விளையாடி வருகிறது. மார்க்ரம் விக்கெட்டை இந்தியப் பந்துவீச்சாளர் ஷமி தொடக்கத்திலேயே வீழ்த்தினார். அடுத்தடுத்து இந்தியப் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுக்கும் விதத்தில் பந்துவீசினர்.
இதில் அஸ்வின் வீசிய பந்தில் டீன் எல்கர் எல்பிடபிள்யு முறையில் தடுத்தார். இதனைக்கண்ட அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்தனர். இதற்கு களநடுவர் எராஸ்மஸ் அவுட் வழங்கினார். ஆனால், கேப்டன் எல்கர் டிஆர்எஸ்முறையில் அப்பீல் செய்தார்.
இதை டிவி ஸ்க்ரீனில் பார்த்த நடுவர்கள் பந்து ஸ்டெம்புக்கு மேலே செல்லும் என்று கூறி அவுட் வழங்கியதை ரத்து செய்தனர். எல்கர் கால்காப்பில் வாங்கியது தெளிவாகத் தெரிந்தது, அவுட் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், டிஆர்எஸ் முறையில் ரத்தானது இந்திய வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. களநடுவர் எராஸ்மஸ் “impossible” எனச் சொல்லி சிரித்துக்கொண்டார்.