
ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை, முதலில் பேட்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் சோ்த்தது.
இதையடுத்து விளையாடிய கேகேஆர் அணி நிதிஷ் ரானா, ரிங்கு சிங் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 18.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் எடுத்து வென்றது. இந்தத் தோல்வியால், பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யாமல் அதை நெருங்கிய நிலையிலேயே நிற்கிறது சென்னை. மறுபுறம் கொல்கத்தாவும் முழுமையாக போட்டியிலிருந்து வெளியேறாத நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் இத்தோல்வி குறித்து பேசிய எம் எஸ் தோனி, “நான் டாசில் தவறான முடிவை எடுத்து விட்டேன். அதற்கு காரணம் பனிப்பொழிவு இருக்குமா இல்லையா என்று எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆடுகளம் தொய்வாக இருக்கும் என்பதற்காக நாங்கள் முதலில் பேட்டிங்கை எடுத்தோம். ஆனால் நாங்கள் பந்து வீசும் போது , இங்கு 180 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்று முதல் பந்திலேயே தெரிந்து விட்டது.