Advertisement

எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: இந்தியாவை 211 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!

வங்கதேச ஏ அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் இதிய ஏ அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: இந்தியாவை 211 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: இந்தியாவை 211 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 21, 2023 • 05:44 PM

இளம் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஏ - வங்கதேசம் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 21, 2023 • 05:44 PM

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சாய் சுதர்ஷன் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சாய் சுதர்ஷன் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிகின் ஜோன்ஸும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Trending

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் யாஷ் துல் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் களமிறங்கிய நிஷாந்த் சந்து 5 ரன்களுக்கும், ரியான் பராக் 12 ரன்களுக்கும், துருவ் ஜூரெல், ஹர்ஷித் ரானா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய யாஷ் துல் 66 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் 49.1 ஓவர்களில் இந்திய ஏ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன், ஹசன் ஷாகிப், ரகிபுல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement