
Carlos Braithwaite In Isolation, 'Not Sure' Of Playing CPL 2021 Opener (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆலரவுண்டருமானவர் கார்லஸ் பிராத்வையிட். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த தி ஹண்ரட் தொடரில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்நிலையில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நாளை மறுநாள் முதல் தொடங்கவுள்ளது. இத்தொடரின் ஜமைக்கா தல்லாவஸ் அணிக்காக விளையாடிவரும் பிராத்வையிட், இன்று விமானம் மூலம் வெஸ்ட் இண்டீஸ் சென்றார்.
ஆனால் அவருடன் பயணம் செய்த சக பயணி ஒருவருக்கு விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதியாகியது. இதனால் கார்லஸ் பிராத்வைட்டும் தனிமைப்படுத்தப்பட்டார்.