
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2022 போட்டியில் சன்ரைசர்சின் வேகப்புயல் உம்ரன் மாலிக் மற்றொரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து அவரை உடனே பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்தில் இடம்பெற செய்ய வேண்டும் அவரை விட்டு விடாதீர்கள் என்று ரவிசாஸ்திரி பிசிசிஐக்கு வலியுறுத்தியுள்ளார்.
3 விக்கெட்டுகளை உம்ரன் மாலிக் கைப்பற்றி மும்பை அணியின் தோல்விக்கு வித்திட்டார், காரணம் இஷான் கிஷன் ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி 10 ஓவர்களில் 95/0 என்று கொண்டு சென்ற பிறகு இவரது புயல்வேகத்தை எதிர்கொள்ள முடியவில்லை. மேலும் ரோஹித் சர்மாவே ஹெல்மெட்டில் நங்கென்று வாங்கினார், இஷான் கிஷனுக்கு உம்ரன் மாலிக் ஓடி வரும்போதே கால்கள் நடுங்குவதைப் பார்க்க முடிந்தது.
இந்நிலையில் உம்ரான் மாலிக் குறித்து பேசிய ரவி சாஸ்திரி கூறிகையில், “உம்ரான் மாலிக்கிற்கு பிசிசிஐ மத்திய வீரர்கள் ஒப்பந்தம் வழங்க வேண்டும். அவரை முக்கிய வீரர்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள், மேலும் ஷமி, பும்ரா ஆகியோரிடமிருந்து அவர் கற்றுக்கொள்ளட்டும், அவர்கள் பயிற்சி செய்யும் விதம், அவர்கள் தங்கள் பணிச்சுமையை நிர்வகிக்கும் விதம் ஆகியவற்றை உம்ரன் மாலிக் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆகவே அவரை வழிதவற விடாதீர்கள்.