
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதுல் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை மறுநாள் புனேவில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தில் தொடரும் நிலையில், இந்திய வீரர் திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதேசமயம் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 4ஆம் இடத்திலும், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 5ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேசமயம் இந்த தரவரிசைப் பட்டியலில் யஷஸ்வி ஜெஸ்வால் ஒரு இடம் பின் தங்கி 9ஆம் இடதிற்கும், ருதுராஜ் கெய்க்வாட் 2 இடங்கள் பின் தங்கியும் உள்ள நிலையில், இங்கிலாந்து தொடரில் சோபிக்க தவறிய சஞ்சு சாம்சன் 12 இடங்கள் பின் தங்கியும் 29ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
Highest-ranked Indian batter and bowler in the ICC T20I standings!#INDvENG #TeamIndia #TilakVarma #VarunChakravarthy pic.twitter.com/63W12MrUVK
— CRICKETNMORE (@cricketnmore) January 29, 2025