
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா, தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் இந்தியா வெற்றிபெறவில்லை என்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாது.
இதனால், இன்றைய போட்டியில் இந்தியா அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பேட்டிங் வரிசை மிகவும் பலமிக்கதாகத்தான் இருக்கிறது. இன்று ஆவேஷ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இன்று சேர்த்து, பந்துவீச்சு துறையையும் ரோஹித் பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 175 ரன்களை சிறப்பாக துரத்தி வெற்றிபெற்றனர். இதில் யாரும் அரை சதம் அடிக்கவில்லை. பலர் 30+ ரன்களை அடித்து, தங்களது பேட்டிங் வரிசையின் வலிமையை வெளிகாட்டினர். இதனால், இலங்கை அணியில் 7,8 விக்கெட்கள் விழுந்தாலும் ரன் வேகத்தில் தொய்வு ஏற்பட வாய்ப்புகள் இருக்காது என்றுதான் கருதப்படுகிறது.